New TOTO Match: சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore pools) TOTO Match என்ற புதிய டோட்டோ விளையாட்டை அறிமுகம் செய்துள்ளது.
டோட்டோ விளையாட்டில் நிலையான குறிப்பிட்ட பணத்தை வெல்ல வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதால் இந்த புதிய விளையாட்டை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் கூறியது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
மேலும், இதுபோன்ற நிலையான பணத்தை வெல்லும் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் அது கூறியது.
இது வாடிக்கையாளர்கள் சட்டவிரோதமாக விளையாடுவதை தடுப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய TOTO Match கான விற்பனை வரும் ஜூன் 10 முதல் அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் தொடங்கும்.
TOTO Match என்றால் என்ன?
TOTO Match வழக்கமான டோட்டோ விளையாட்டிலிருந்து வேறுபடும். இதில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் பரிசு கிடைக்காது. அதற்கு பதிலாக, ஒரு வெள்ளிக்கு குறிப்பிட்ட பரிசுத் தொகை உறுதியாக கிடைக்கும்.
இதன் பொருள் பந்தயம் கட்டும் வெள்ளி அதிகரிக்க அதிகரிக்க வெற்றி பெரும் தொகையும் அதிகரிக்கும் என்பது முக்கியமான ஒன்று.
இது எப்படி வேலை செய்கிறது?
வாடிக்கையாளர்கள் இரண்டு விளையாட்டு வகைகளின் கீழ் டிக்கெட் வாங்க முடியும்.
முதல் வகை
இதில் ஒன்று முதல் 49 வரையிலான எண்களில், இரண்டு முதல் நான்கு எண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் ஆறு வெற்றி எண்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எண்களும் இடம்பெற்றால் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வெள்ளி பந்தயத்திற்கும், இரண்டு எண்கள் பொருந்தினால் S$50, மூன்று எண்கள் பொருந்தினால் S$500 மற்றும் நான்கு எண்கள் பொருந்தினால் S$7,000 வெல்லலாம்.
இரண்டாவது வகை
இரண்டாவது வகை பந்தயத்தில், ஒன்று முதல் 49 வரையிலான எண்களில் ஒரு எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த எண் கூடுதல் எண்ணுடன் (additional number) பொருந்தினால், ஒவ்வொரு வெள்ளி பந்தயத்திற்கும் S$30 வெள்ளி பரிசாக கிடைக்கும்.
ஆனால் இதில் வெற்றி பெற, TOTO Match விளையாட்டின் கீழ் பந்தயம் கட்ட வேண்டும்.
சாதாரண டோட்டோ பந்தயம் இதற்கு பொருந்தாது.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

