
அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை, தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், “அவ்வாறான எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

