• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானில் அணைகள் வேகமாக வறண்டு வருவதால் நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள் | Crop sowing in crisis as dams dry up rapidly in Pakistan

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானில் அணைகள் வேகமாக வறண்டு வருவதால் நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள் | Crop sowing in crisis as dams dry up rapidly in Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது. இதனால், பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன. பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு வரு​கின்றன. இதற்​கு, பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக செனாப் நீர் வரத்தை கட்​டுப்​படுத்த இந்​தியா எடுத்த நடவடிக்கை முக்​கிய காரண​மானது.

அணை​களில் போ​திய நீர் இருப்பு இல்​லாதது மே-செப்​டம்​பர் மாதங்​களில் கோடை விதைப்பு பணி​களுக்கு நீர் கிடைப்​ப​தில் சிரமத்தை ஏற்​படுத்​தும். அத்​துடன் இந்த மாதம் காரீப் பரு​வத்​தின் ஆரம்ப விதைப்பு பணி​கள் மேலும் மோசமடையக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், ஒட்​டுமொத்த நீர்​வரத்​தில் 21 சதவீதம் அளவுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அறி​வித்​துள்​ளது.

செனாப் நதி​யில் இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதை கருத்​தில் கொண்டு அணையி​லிருந்து வரும் நீரை சிக்​க​ன​மாக பயன்​படுத்த அணை அதி​காரி​கள் மற்​றும் நீர்ப்​பாசன விநியோக கண்​காணிப்பு நிறு​வனங்​களை பாகிஸ்​தான் ஏற்​கெனவே அறி​வுறுத்​தி​யுள்​ளது.

நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பரு​வ​மழை பெய்​யும் போது நிலைமை மேம்​படக்​கூடும். என்​றாலும், அடுத்த மாதத்​திற்​குள் பாகிஸ்​தானின் விவ​சாய நடவடிக்​கைகள் பெரு​மளவு, செனாப் நதி​யில் உள்ள அதன் சொந்த நீர்த்​தேக்​கங்​களான பாக்​லிஹார் மற்​றும் சலால் ஆகிய​வற்றை நம்​பியே உள்ளது. செனாப் நதி​யின் நீர்​வரத்து திடீரென குறைவது காரீப் பரு​வத்​தின் சாகுபடியை பெரிதும்​ பா​திக்​கும்​ என்​று அந்​த ஆணை​யம்​ கவலை​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளது.



Read More

Previous Post

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு மீண்டும் முதலிடத்தை பிடித்த எம்ஆர்எப் நிறுவனம் | MRF is Indias most valuable stock again regaining the top

Next Post

‘நான் கொடுமைப்படுத்துபவர்களுக்கு அடிபணிய மாட்டேன்’ – Malaysiakini

Next Post
‘நான் கொடுமைப்படுத்துபவர்களுக்கு அடிபணிய மாட்டேன்’ – Malaysiakini

‘நான் கொடுமைப்படுத்துபவர்களுக்கு அடிபணிய மாட்டேன்’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin