Last Updated:
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சாய் சுதர்சன் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்ற வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார்.
ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறார் சாய் சுதர்சன். முன்னதாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த இளம் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் ஏற்படுத்தி இருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதலே சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த சாய் சுதர்சன் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 759 ரன்கள் குவித்தார். இதில் 1 சதமும் 6 அரை சதங்களும் அடங்கும்.
சராசரி 54.21 ரன்கள். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்று இருக்கிறார் சாய் சுதர்சன். மேலும் இந்த சாதனை ஏற்படுத்திய இளம் வீரர் என்ற ரிக்கார்டும் சாய் சுதர்சனால் உருவாக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு சுப்மன் கில் அதிக ரன் குவித்ததற்காக ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 263 நாட்களாக இருந்தன. தற்போது சாய் சுதர்சன் ஆரஞ்சு கேப் பெற்றுள்ள போது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 231 நாட்களாக உள்ளது.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சாய் சுதர்சன் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
June 03, 2025 11:14 PM IST


