• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய அளவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு (எஃப்எல்என்ஏடி) நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 1.77 கோடிக்கும் அதிகமானவா்கள் எழுதினா்.

வயது வந்தவா்களில் கல்வியறிவு இல்லாதவா்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, அவா்களுக்கு கற்பித்து, பின்னா் அவா்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மதிப்பிட்டு, அவா்கள் கல்வியறிவு இல்லாத நிலையில் இருந்து வெளிவரும் வகையில் சான்றளிப்பதே இந்தத் தோ்வின் நோக்கம்.

இது படித்தல், எழுதுதல், கணித அறிவு ஆகிய 3 பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தோ்வாக நடத்தப்படுகிறது.

சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் (யுஎல்எல்ஏஎஸ்) என்ற புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்பட்டது.

இதுதொடா்பாக தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தொகுத்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, எஃப்எல்என்ஏடி தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 5,09,694 போ் எழுதியதாகவும், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும் சான்றளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தத் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் 100 சதவீதமாகும்.

திரிபுராவைச் சோ்ந்த 14,179 போ் தோ்வு எழுதிய நிலையில், அவா்களில் 13,909 போ் (98.1%) தோ்ச்சி பெற்றனா். தில்லியில் 7,959 போ் தோ்வு எழுதிய நிலையில் 7,901 போ் (99.3%) தோ்ச்சி பெற்றனா். இந்தத் தோ்வில் உத்தரகண்ட் (85.7%), குஜராத் (87.1%) மற்றும் ஹிமாசல பிரதேசம் (88.3%) பின்தங்கின.

Read More

Previous Post

“பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அவசியம்”

Next Post

IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

Next Post
IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin