Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மழை குறுக்கிடுமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்க உள்ளது. முதன் முறையாக இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும். இரு அணிகளும் சம பலம் கொண்டவையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. அணியில் விராட் கோலி மற்றும் பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அசுர பலத்தில் உள்ளார்கள். இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நிலவும் வானிலை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைக்கு 30 முதல் 33 செல்சியஸ் டிகிரி அளவுக்கு வெப்பநிலை இருக்கும்.
மேலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக இன்றைக்கு மழை பெய்ய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வானிலை முன்னறிவிப்பையும் தாண்டி மழை பெய்தாலும் பிசிசிஐ ரிசர்வ் டே வைத்துள்ளது. அதாவது இன்றைக்கு மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால், இன்றைய நிலையில் இருந்து நாளைக்கு ஆட்டம் தொடரும்.
இதனால் போட்டியை ரசிகர்கள் முழுமையாக கண்டு ரசிக்கலாம். முன்பு நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியின் போது மழை குறுக்கிட்டது என்பது கவனிக்கத்தக்கது. முன்பு நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியின் போது மழை குறுக்கிட்டது என்பது கவனிக்கத்தக்கது.
June 03, 2025 6:36 PM IST


