• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என்னது… ரூபாய் நோட்டுகளால் செய்த நாற்காலியா…? அதில் உட்கார நீங்க தயாரா..?

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
என்னது… ரூபாய் நோட்டுகளால் செய்த நாற்காலியா…? அதில் உட்கார நீங்க தயாரா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 03, 2025 8:36 PM IST

சமீபத்தில் வெளியான ஆண்டுவாரியான அறிக்கையின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ரூபாய் நோட்டுகளை மரச்சாமான்களாக மறுசுழற்சி செய்வதற்கான முயற்சியில் RBI ஈடுபட்டுள்ளது.

News18News18
News18

பணத்தால் செய்யப்பட்ட ஒரு பொருளை வாங்குவது பற்றி என்றைக்காவது ஒரு நாள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சேதமான மற்றும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை மரப்பலகைகளாக மாற்றுவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மரப்பலகைகள் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செய்யப்பட்டு, வீட்டு மரச்சாமான்கள் உற்பத்தி செய்வதற்குக் கூடிய விரைவில் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவதற்கான பசுமை அணுகுமுறை:

சமீபத்தில் வெளியான ஆண்டுவாரியான அறிக்கையின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ரூபாய் நோட்டுகளை மரச்சாமான்களாக மறுசுழற்சி செய்வதற்கான முயற்சியில் RBI ஈடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குச் சாதகமாக அமையும் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான திறன்கள் கொண்ட உற்பத்தியாளர்களுடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 15,000 டன் ரூபாய் நோட்டு கழிவுகள்:

RBI 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவானது ஒவ்வொரு ஆண்டும் 15,000 டன் அளவிலான ரூபாய் நோட்டு கழிவுகளை உருவாக்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாரம்பரிய முறைப்படி இந்த நோட்டுகள் ஒன்று எரிக்கப்படும் அல்லது குப்பைகளோடு சேர்த்துப் புதைக்கப்படும். எனினும், இது சுற்றுச்சூழலுக்குக் குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடிய முறைகளாகக் கருதப்படுகிறது. எனவே, இதற்குச் சுற்றுச்சூழலுக்குத் தோதான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்காக RBI வுட்டன் சயின்ஸ் அண்ட் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்துள்ளது.

இந்த வுட்டன் சயின்ஸ் அண்ட் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் என்பது மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒன்று. ரூபாய் நோட்டு கழிவுகள் மூலமாகச் செய்யப்படும் இந்த மரப்பலகைகள் தேவையான தொழில்நுட்பத் தர நிலைகளைப் பூர்த்தி செய்வதாக இவர்களுடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாகத் தற்போது RBI உற்பத்தியாளர்களுடன் இணைந்து மறுசுழற்சி செய்யப்பட்ட ரூபாய் நோட்டு கழிவுகளை மரத்துகள்களாக மாற்றவுள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ரூபாய் நோட்டு நிர்வாகிப்புத் துறையானது, தொடர்ந்து ரூபாய் நோட்டு கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான சுற்றுச்சூழலுக்குத் தோதான முறைகளைக் கண்டுபிடித்து வருகிறது. ரூபாய் நோட்டுகளில் உள்ள மை, ஃபைபர், பாதுகாப்பு நூல்கள் மற்றும் கெமிக்கல்கள் ஆகியவை இருக்கும் காரணத்தால் இதனை மறுசுழற்சி செய்வதற்கு ஒரு நிலையான முறை தேவை. இந்தப் புதிய அணுகுமுறை மூலமாகப் பழைய ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும் என்று நம்பப்படுகிறது.

First Published :

June 03, 2025 8:36 PM IST

Read More

Previous Post

தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து மைதானம் வந்த கிறிஸ் கெயில் ஆதரவு யாருக்கு? – IPL Final | Chris Gayle at stadium with turban and RCB jersey IPL Final punjab kings

Next Post

இணையவழியான தீங்கைத் தடுக்க மெட்டா மற்றும் எக்ஸ் தளம் போதுமான அளவு செயல்படவில்லை – பாமி – Malaysiakini

Next Post
இணையவழியான தீங்கைத் தடுக்க மெட்டா மற்றும் எக்ஸ் தளம் போதுமான அளவு செயல்படவில்லை – பாமி – Malaysiakini

இணையவழியான தீங்கைத் தடுக்க மெட்டா மற்றும் எக்ஸ் தளம் போதுமான அளவு செயல்படவில்லை – பாமி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin