இதில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஆர்.சி.பி. அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்த இன்னிங்ஸ் முடிவடையாத நிலையில் முந்தைய போட்டிகளின் அடிப்படையிலான புள்ளி விபரங்களை பார்த்துள்ள ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகத்திலும் மிதக்கத் தொடங்கியுள்ளார்கள். அதாவது முன்பு 4 முறை ஆர்.சி.பி அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.
இதில் அனைத்து போட்டிகளிலும் சேஸிங்கில் ஈடுபட்ட அதாவது இரண்டாவது பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த முறை ஆர்.சி.பி முதலில் பேட்டிங் செய்கிறது.
இதனால் அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் அதன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரம்-
ஆர்சிபி அணியில் இன்று விளையாடும் வீரர்கள்..
பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இன்று விளையாடும் வீரர்கள்..
பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
June 03, 2025 7:47 PM IST
IPL 2025 : முந்தைய 4 ஃபைனல்ஸில் நடக்காத சம்பவம்.. உற்சாகத்தில் மிதக்கும் ஆர்சிபி ரசிகர்கள்

