Singapore offers: விளையாட்டு பொம்மைகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு.
தற்போது முதல் ஜூன் 10 வரை, அதிரடி தள்ளுபடி விலையில் நீங்கள் பொம்மைகளை வாங்குவதற்கான விற்பனை கண்காட்சியை Gift Boutique ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்
இந்த தள்ளுபடி விற்பனை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை SAFRA Punggol இல் நடைபெறும்.
அந்நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின்படி, இந்த பொம்மை விற்பனை கண்காட்சியில் பல்வேறு வகையான புதிய பொம்மைகள் இடம்பெறும் என்றும், விரும்பியதை நீங்கள் தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், சில பொம்மைகள் S$5 வெள்ளிக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
அதே போல, பிரபலமான பிராண்டுகளின் பொம்மைகளுக்கும் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஹாட் வீல்ஸின் (Hot Wheel) ஒரு பொம்மை S$8க்கு விற்கப்படுகிறது, அதன் உண்மை விலை S$39.90 என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொம்மைகளும் புத்தம் புதியவை என்றும் நவீனமானவை என்றும் Gift Boutique கூறியது.
Safra Punggol முகவரி: 9 Sentul Crescent, Singapore 828654
Photo: Gift Boutique & Botak Jazz/Facebook
பொது இடத்தில் சிறுநீர் கழித்து, சத்தம் எழுப்பி அட்டகாசம் – வார இறுதியில் கூடும் மர்ம கும்பல்

