ஐசிஐசிஐ வங்கியின் FD-க்கான வட்டி விகிதங்கள்:
ஐசிஐசிஐ வங்கி அதன் எஃப்டி வட்டி விகிதங்களை 20 பேசிஸ் பாயிண்ட்ஸ் (basis points) குறைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்தப் புதிய வட்டி விகிதங்கள் கடந்த மே 27, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

– 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 3% முதல் 6.85% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
– அதிகபட்ச வட்டி விகிதமாக 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.85% வட்டி வழங்கப்படுகிறது.
– 60 வயதிற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் எந்த FD திட்டங்களில் முதலீடு செய்தாலும் கூடுதலாக 0.5% வட்டி பெறுவார்கள்.
HDFC வங்கியின் FD-க்கான வட்டி விகிதங்கள்:
மற்றொரு பிரபல தனியார் வங்கியான HDFC-யும் அதன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 23, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 3% முதல் 6.85% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
– அதிகபட்சமாக 15 முதல் 21 மாதங்கள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.85% வட்டி வழங்கப்படுகிறது.
– 60 வயதிற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் எந்த FD திட்டங்களில் முதலீடு செய்தாலும் கூடுதலாக 0.5% வட்டி பெறுவார்கள்.
உத்தரவாதமான வருமானம், சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்கள் மற்றும் FD-க்கு எதிராகக் கடன் வாங்கிக் கொள்ளும் வசதி போன்ற பல நன்மைகளை FD திட்டங்கள் வழங்குகின்றன. மேலும், அவை தவணைக் காலத்தில் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றன. FD திட்டங்களுக்கான இந்தச் சமீபத்திய வட்டி குறைப்புகளால், வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை, குறிப்பாக நிலையான வருமானத்திற்காக நிலையான FD-யை நம்பியிருக்கும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
June 03, 2025 1:51 PM IST

