Last Updated:
அண்மைக் காலமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் மனைவியை தம்பிள்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற கணவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான மாருதி நகரைச் சேர்ந்த தம்பதி பசவச்சாரி – சுமா. 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிக்கு 14 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். வெல்டிங் வேலை செய்து வரும் பசவாச்சாரி, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளார். இதனால், அண்மைக் காலமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்றதும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பசவச்சாரி உடற்பயிற்சி செய்ய பன்படுத்தப்படும் தம்பிள்ஸ் மூலம் தனது மனைவியின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து, பசவச்சாரியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிற்பகலில் மூத்த மகன் வீட்டிற்கு வந்ததும், தாயும், தந்தையும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். தகவலின்பேரில் விஜயபுரா போலீசாரும் அங்கு வந்தனர்.
பின்னர், தம்பதியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பசவச்சாரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில், பண பிரச்சினையில் தனக்கும், தனது மனைவிக்கும் இடையே அக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்த சூழலில் மோதல் வெடித்து கோபத்தில் மனைவியை கொன்று விட்டதாகவும், துக்கம் தாக்க முடியமால் தானும் தற்கொலை செய்வதாக எழுதியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் தாயையும், தந்தையையும் இழந்த இரு பிள்ளைகளும் ஆதரவின்றி நிர்கதியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
கணவன் – மனைவி தகராறில் அடுத்தடுத்து நடந்த விபரீதம்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்! – என்ன நடந்தது?


