லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் தங்களது சேமிப்புகளுக்கு நல்ல ரிட்டன்கள் பெற வேண்டும் என்ற இரட்டிப்பு பலன்களை எதிர்பார்க்கக்கூடிய நபர்களுக்கு LIC நிறுவனத்தின் ஜீவன் லாப் திட்டம் (LIC’s Jeevan Labh plan) ஒரு சிறந்த ஆப்ஷனாக அமைகிறது. மிகவும் நம்பகமான லைஃப் இன்சூரரிடம் இருந்து வரக்கூடிய இந்த திட்டமானது குறிப்பிட்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்துதல் மற்றும் உறுதியளிக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. வழக்கமாக இந்த திட்டம் பாலிசி காலத்தின் பொழுது பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை பாலிசி காலத்தில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான தொகை பாலிசி காலம் முடிவடையும் பொழுது வழங்கப்படுகிறது.
தகுதி வரம்பு மற்றும் பிற கட்டுப்பாடுகள்:
குறைந்தப்பட்ச அடிப்படை உறுதியளிக்கப்பட்ட தொகை: 2 லட்ச ரூபாய்
அதிகப்பட்ச அடிப்படை உறுதி அளிக்கப்பட்ட தொகை: அதிகபட்ச வரம்பு கிடையாது
பாலிசி காலம் மற்றும் பிரீமியம் செலுத்த வேண்டிய காலம்: பாலிசிதாரர்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன அதில் 16/10 வருடங்கள், 21/15 வருடங்கள் மற்றும் 25/16 வருடங்கள் போன்றவை அடங்கும். அதாவது பாலிசிதாரர்கள் பாலிசி காலம் முழுவதும் பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
திட்டத்தில் சேருவதற்கான குறைந்தப்பட்ச வயது: 8 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும்
திட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகப்பட்ச வயது:
16 வருட பாலிசி காலத்திற்கு சமீபத்தில் வந்த பிறந்த நாளோடு 59 வயது
21 வருடங்கள் பாலிசி காலத்திற்கு சமீபத்தில் வந்த பிறந்தநாளோடு 54 வயது
25 வருடங்கள் பாலிசி காலத்திற்கு சமீபத்தில் வந்த பிறந்தநாளோடு 50 வயது
அதிகப்பட்சம் மெச்சூரிட்டி வயது: 75 வருடங்கள் (சமீபத்தில் வந்த பிறந்தநாள்)
பலன்கள்:
இறப்பு கால பலன்: பாலிசி காலத்தில் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்துவிடும் பட்சத்தில், நாமினிக்கு உறுதி அளிக்கப்பட்ட அடிப்படை தொகை மற்றும் போனஸ் ஆகியவை வழங்கப்படும்.
இதையும் படிங்க:
வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கி… 9% வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இதுதான்! – முழு விபரம் இதோ!
மெச்சூரிட்டி பலன்:
பாலிசி காலம் முழுவதும் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் பொழுது மெச்சூரிட்டியின் பொழுது வழங்கப்பட உள்ள உறுதியளிக்கப்பட்ட தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் எளிய மறுசீரமைப்பு போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் ஆகியவையும் வழங்கப்படும். மெச்சூரிட்டியின் பொழுது வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட தொகையானது அடிப்படை உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு சமம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மெச்சூரிட்டி பலனை இன்ஸ்டால்மென்ட் முறையில் பெறுவதற்கான ஆப்ஷனும் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது மெச்சூரிட்டி தொகையை 5 வருடங்கள், 10 வருடங்கள் அல்லது 15 வருடங்கள் என்ற முறையில் இன்ஸ்டால்மெண்டாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பலன்கள் மட்டுமல்லாமல் பாலிசிதாரர் ஆக்சிடென்ட் டெத் ரைடர், ஆக்சிடென்ட் டெத் அண்ட் டிசிபிலிட்டி பெனிஃபிட் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் பெனிஃபிட் ரைடர் மற்றும் LICயின் புதிய டேர்ம் அஷுரன்ஸ் ரைடர் போன்ற கூடுதல் பலன்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
LIC’s ஜீவன் லாப் பலன் மற்றும் ரிட்டன்:
ஒருவேளை ஒருவர் LIC ஜீவன் லாப் திட்டத்தை தனது 30வது வயதில் 5 லட்ச ரூபாய் உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு, 16 வருடங்கள் பாலிசி காலத்துடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி இருக்க அவர் ஒரு வருடத்திற்கு 43,127 ரூபாய் என்ற வீதத்தில் 10 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். இது முதல் பாலிசி வருடத்திற்கு 4.5 சதவீத GST உட்பட ஒரு நாளைக்கு 118 ரூபாய் கணக்காகிறது. மெச்சூரிட்டியின் போது பாலிசிதாரருக்கு கிட்டத்தட்ட 8.33 லட்சம் ரூபாய் ரிட்டன் ஆக கிடைக்கும். இதில் 5 லட்சம் ரூபாய் அடிப்படை உறுதி அளிக்கப்பட்ட தொகை மற்றும் 3, 32, 500 ரூபாய் போனஸ் ஆகியவை அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
