Last Updated:
16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 14வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இதில் வெற்றி பெற்ற 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதின.
போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சம பலத்துடன், தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இரு அணிகளும் 2:2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில், சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டு, அதில் 4:2 என்ற (மொத்தம் 6:4) கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் – செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. போட்டி தொடங்கியது முதல் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் இறுதியில் 2:0 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்றது.
Thoothukkudi,Tamil Nadu
June 02, 2025 4:14 PM IST

