• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர் பிணையில் விடுதலை

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர் பிணையில் விடுதலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

அகதி முகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக அகதியாக சென்றவர்
மீண்டும் இலங்கைக்கு திரும்பிய வேளை கைது செய்யப்பட்டு, மல்லாகம்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்றையதினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு  

யாழ். பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (CID) உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர் பிணையில் விடுதலை | Tamil Refugee Arrested In Airport Ananda Wijepala

இந்தியாவிலுள்ள (India)அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை(29) நாடு திரும்பிய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஊடகமொன்று அமைச்சர் ஆனந்த விஜயபாலவை தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு சட்டங்கள்

அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை.

அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன்.


அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர் பிணையில் விடுதலை | Tamil Refugee Arrested In Airport Ananda Wijepala



ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின்கொள்கை அல்ல.


அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

 

அநுர அரசு பகிரங்க அழைப்பு

அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும்.

அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர் பிணையில் விடுதலை | Tamil Refugee Arrested In Airport Ananda Wijepala


ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது“ என தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை(29) நாடு திரும்பிய நபர் பலாலி விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

ம இ கா வின் அமைதியும், அம்னோவின் ஆணவமும் – Malaysiakini

Next Post

பாலியல் வன்கொடுமை.. கழுத்து உள்ளிட்ட 20 இடங்களில் கத்தியால் வெட்டு.. 9 வயது சிறுமிக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

Next Post
பாலியல் வன்கொடுமை.. கழுத்து உள்ளிட்ட 20 இடங்களில் கத்தியால் வெட்டு.. 9 வயது சிறுமிக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

பாலியல் வன்கொடுமை.. கழுத்து உள்ளிட்ட 20 இடங்களில் கத்தியால் வெட்டு.. 9 வயது சிறுமிக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin