Last Updated:
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரளா முதல்வரின் மருமகன் நிதியுதவி வழங்கியதாக பாஜக முன்னாள் தலைவர் கே. சுரேந்திரன் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஜோதி மல்ஹோத்ராவின் கேரளா கண்ணூர் பயணத்திற்கு அம்மாநில முதலமைச்சரின் மருமகன் அரசு நிதி வழங்கியதாக அம்மாநில பாஜக முன்னாள் தலைவர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் இணைந்து இந்தியாவில் உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு இரண்டு, மூன்று முறை பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறார். மேலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில், அவர் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதிக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அதற்கு கேரளா அரசு நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டதாகவும் கேரளா பாஜக முன்னாள் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரளா மாநில பாஜக முன்னாள் தலைவர் கே. சுரேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் நிர்வகிக்கும் கேரளா சுற்றுலாத்துறை நிதி உதவி மூலம் பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கண்ணூருக்கு பயணம் மேற்கொண்டார்.
Pak-Spy Jyoti Malhotra’s Kannur trip was sponsored by Kerala Tourism, run by none other than Pinarayi Vijayan’s son-in-law.
Who did she meet? Where did she go? What’s the real agenda?Why is Kerala rolling out red carpets for a Pak-linked spy?@pinarayivijayan is turning…
— K Surendran (@surendranbjp) May 31, 2025
அவர் யாரைச் சந்தித்தார்? எங்கே சென்றார்? அவரின் உண்மை குறிக்கோள் என்ன? பாகிஸ்தான் தொடர்புடைய உளவாளிக்கு கேரளா ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கிறது? பினராயி விஜயன், நமது நாட்டிற்கு உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு கேரளாவைப் பாதுகாப்பான இடமாக மாற்றுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
June 01, 2025 7:22 PM IST


