Last Updated:
இருவருக்கும் இடையே முன்பு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருப்பினும் இருவரும் தங்களது பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து இருந்துள்ளனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் அரசியல் பிரபலத்தை திருமணம் முடிக்க உள்ளார். அவர்களது நிச்சயதார்த்த தேதி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங் விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்குக்கு இந்திய அணியில் விளையாடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடதுகை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் மிகவும் சாமர்த்தியமாக விளையாடி ரன்களை குவிப்பதில் கில்லாடியாக உள்ளார்.
இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி இரு தரப்பிலும் யாரும் பெரிதாக தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்த தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது ரிங்கு சிங்குக்கும் பிரியா சரோஜுக்கும் இடையே முன்பு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருப்பினும் இருவரும் தங்களது பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து இருந்துள்ளனர்.
இருவரின் குடும்பத்தினரும் பேசி முடித்து நிச்சயதார்த்த தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரிங்கு சிங்குக்கும் பிரியா சரோஜுக்கும் ஜூன் 8-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
மிகவும் எளிய பின்புலத்தை கொண்ட ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணி வீரராக உயர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரை கரம் பிடிக்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
June 01, 2025 6:02 PM IST


