தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடந்துவந்த உலக அழகிப்போட்டியில் பல்வேறு நிலைகளில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாப் 40, 10, 5, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் தாய்லாந்து அழகியான ஒபால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலக அழிகப்போட்டியில் இரண்டாவது இடத்தை எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹசத் டெரிஜீ, மற்றும் 3 ஆம் இடத்தை போலந்தைச் சேர்ந்த மஜா லஜ்தா ஆகியோர் வென்று அசத்தினர்.


