Last Updated:
ஒப்பிட்டு அளவில் மிக மிக அதிக கடன் சுமை கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறி உள்ளது
உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐ.எம்.எஃப். போதிய கடன்களை வழங்குகிறது. ஒரு நாட்டுடைய வளர்ச்சிக்காக அல்லது வறுமையின் பிடியில் இருந்து வெளியேறுவதற்காக பல்வேறு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்களைப் பெறுகின்றன.
இதற்கு சில விதிமுறைகள் உண்டு. முதலில் கடன் பெறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திடம் அரசு கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்னர் அரசு நிர்வாக அதிகாரிகளும் ஐ.எம்.எஃப். அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, அதன் பின்னர் நாடுகளுக்கு கடன்கள் வழங்கப்படும்.
1944 ஆம் ஆண்டிலிருந்து இந்த சர்வதேச நாணய நிதியம் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் கடன்களைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அதிக கடன் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அர்ஜென்டினா கடன் வாங்கி உள்ளது. பொதுவாக அமெரிக்க டாலர், யூரோ, சீனா, ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பில்தான் கடன்கள் வழங்கப்படும். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
அர்ஜென்டினாவுக்கு அடுத்தபடியாக, போரில் சிக்கித் தடுமாறி வரும் உக்ரைன் 10.7 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்திலும், எகிப்து 8.2 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சர்வதேச நாணய நிதியிடம் இந்தியாவும் கடன் வாங்கியுள்ளது.
அந்த வகையில் 31-வது இடத்தில் உள்ளது இந்தியா. ஒப்பிட்டு அளவில் மிக மிக அதிக கடன் சுமை கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறி உள்ளது. இதனைத் திரும்ப அந்த நாடால் அடைக்க முடியுமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்தடுத்து கடன்களை அந்த நாடு பெறவும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
June 01, 2025 4:48 PM IST
சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன் வாங்கிய நாடு எது? பதில் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..


