• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இறந்துபோன நபரின் தபால்நிலைய சேமிப்புப் பணத்தை கிளைம் செய்வது எப்படி…? படிப்படியான செயல்முறை இதோ…

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இறந்துபோன நபரின் தபால்நிலைய சேமிப்புப் பணத்தை கிளைம் செய்வது எப்படி…? படிப்படியான செயல்முறை இதோ…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால், இறந்து போனவரின் அக்கவுன்டிற்கு நாமினேஷன் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த செயல்முறையானது மாறுபடும். இதற்காக ஒரு சில செயல்முறைகளை இந்தியா போஸ்ட் அமைத்துள்ளது. எனவே, இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு நாமினி பதிவு செய்யப்பட்டிருந்தால்…

அக்கவுன்ட் ஹோல்டர் ஒரு நபரை தனக்கு நாமினியாக நியமித்திருக்கும் பட்சத்தில் எளிமையாக ஒரு கிளைம் மூலமாகவே அக்கவுன்ட்டில் உள்ள பணத்தை நாமினி பெறலாம். இதற்கு நாமினி SBK 2 படிவம், அக்கவுன்ட் ஹோல்டரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

வழக்கமாக 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான கிளைம்களுக்கு வாரிசு சான்றிதழ் இல்லாமலேயே இந்த கிளைம்களை தபால் நிலையமானது பூர்த்தி செய்து கொடுக்கும். பணத்தை நாமினி பணமாகவோ, செக் அல்லது தன்னுடைய தபால் நிலைய அக்கவுன்ட் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். வழக்கமாக டாக்குமென்ட்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 7 வேலை நாட்களுக்குள்ளாக பணம் செலுத்தப்படும்.

ஒருவேளை இறந்து போன நபர் எந்த ஒரு நாமினியையும் நியமித்திருக்காத பட்சத்தில் சட்டபூர்வமான வாரிசுகள் பின்வரும் செயல்முறையில் ஈடுபட வேண்டும். இதில் 2 வகை உண்டு:

5 லட்ச ரூபாய் வரையிலான கிளைம்கள்

இதற்கான கிளைம் சமர்ப்பிப்பவர்கள்

  • SBK 2 படிவம்
  • இழப்பீட்டு உறுதி கடிதம் (SBK 3 படிவம்)
  • பிரமாணப் பத்திரம் மற்றும் பொறுப்பு மறுப்பு கடிதம் (SBK 4 படிவம் மற்றும் SBK 5 படிவம்)
  • இறப்புச் சான்றிதழ்
  • அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ்
  • வாரிசு சான்றிதழ்

ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த டாக்குமெண்ட்களுடன் சேர்த்து கிளைம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அஞ்சல் அலுவலர் கிளைமை ஏற்றுக்கொள்வார்.

5 லட்சம் ரூபாய்க்கு மேல்:

கிளைமை சமர்ப்பிப்பவர் சிவில் நீதிமன்றத்தில் இருந்து வழியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறையை நிறைவு செய்வதற்கு சற்று காலதாமதம் ஆகலாம் மற்றும் நீதிமன்றத்தில் ஆகக்கூடிய செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜாயின்ட் அக்கவுன்ட்களில் ஒரு அக்கவுன்ட் ஹோல்டர் இறந்துபோகும் பட்சத்தில்:

ஜாயின்ட் அக்கவுன்டுகளைப் பொறுத்தவரை உயிருடன் இருக்கும் அக்கவுன்ட் ஹோல்டர், அக்கவுன்டை தன்னுடைய பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான SBK 1 படிவத்தையும், இறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:-

  • எதிர்காலத்தில் எந்தவிதமான சட்டப்பூர்வமான சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு தபால் நிலையத்தில் அக்கவுன்ட் திறக்கும்போது ஒரு நாமினியை பதிவு செய்வது அவசியம்.
  • நாமினி சம்பந்தப்பட்ட விவரங்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் குடும்பத்தினர் சற்று நீளமான சட்டப்பூர்வ செயல்முறைகளில் ஈடுபட வேண்டும்.

தபால் நிலைய அக்கவுன்ட்டுகளில் இறப்பு கிளைம்களை செய்வதற்காகவே இந்தியா போஸ்ட் தனியாக ஒரு செயல்முறையை கட்டமைத்துள்ளது. இதில் ஒரு நாமினியைப் பெற்றிருப்பது இந்த செயல்முறையை எளிமையாக்கும். இல்லையென்றால், சட்டபூர்வமான செயல்முறைகளை ஒவ்வொன்றாக சந்திக்க வேண்டும்.

First Published :

June 01, 2025 1:56 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இறந்துபோன நபரின் தபால் நிலைய சேமிப்புப் பணத்தை கிளைம் செய்வது எப்படி…? படிப்படியான செயல்முறை இதோ…

Read More

Previous Post

சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற பிஎஸ்ஜி: மகளின் நினைவை பகிர்ந்து லூயிஸ் என்ரிக்கே உருக்கம்! | PSG won Champions League title Luis Enrique pays tribute to daughter

Next Post

அமைச்சரவை மறுசீரமைப்பு அவசரமில்லை, ஜஃப்ருல் அமைச்சராக நீடிப்பார் – Malaysiakini

Next Post
அமைச்சரவை மறுசீரமைப்பு அவசரமில்லை, ஜஃப்ருல் அமைச்சராக நீடிப்பார் – Malaysiakini

அமைச்சரவை மறுசீரமைப்பு அவசரமில்லை, ஜஃப்ருல் அமைச்சராக நீடிப்பார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin