Foreigners 5 arrested at Tuas: துவாஸ் சவுத் அவென்யூவில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்காக ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 25 மற்றும் 34 வயதுடைய இருவர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதாகவும், பின்னர் வலுக்கட்டாக அவர்கள் பிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
கடந்த மே 18 முதல் 30 வரை தீவு முழுவதும் நடத்தப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 139 பேரில் இவர்களும் அடங்குவர். அதில் ஆக இளையவர் 14 வயது மாணவர் ஆவார்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட சில போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டது.
வேலையிடத்தில் கீழே விழுந்த ஊழியர் பரிதாப மரணம் – குடும்பத்திற்கு உதவிவரும் MOM
இந்த சோதனை ஆங் மோ கியோ, பூன் கெங், புக்கிட் மேரா, ஜூரோங், செங்காங் மற்றும் கேலாங் ஆகிய பகுதிகளில் நடந்தது.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு S$626,700 க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணைகள் நடந்து வருகின்றன.
Photo: CENTRAL NARCOTICS BUREAU
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்
The post துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது appeared first on Tamil Daily Singapore.

