• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

’வஞ்சக பாஜக, துரோக அதிமுகவை விரட்டி 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்’ திமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
’வஞ்சக பாஜக, துரோக அதிமுகவை விரட்டி 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்’ திமுக பொதுக்குழுவில் தீர்மானம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீர்மானம் : 5

தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!

தமிழ்மொழிக்கும் – இனத்திற்கும் – பண்பாட்டிற்கும் தொண்டாற்றிய தகைசால் தலைவர்களையும், இந்திய ஒன்றிய மக்களால் மதிக்கப்படும் தலைவர்களையும் பாராட்டிப் போற்றுவதில் தி.மு.கழக அரசே எந்நாளும் முன்னோடியாகத் திகழ்கிறது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் கடற்கரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சான்றோர் சிலைகள், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் குமரி முனையில் அமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை, பல தலைவர்களுக்கான நினைவிடங்கள் – மணிமண்டபங்கள் – திருவுருவச் சிலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு தலைவர்களின் நினைவையும் அவர்தம் புகழையும் போற்றும் விதத்தில் சிலைகளும் நினைவரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள், சிந்துவெளி ஆய்வை வெளியிட்ட சர் ஜான் மார்ஷல் ஆகியோருக்குச் சிலை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலை, கிண்டி காந்தி மண்டபத்தில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதருக்குச் சிலையுடன் மணிமண்டபம், காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஆகியோருக்குச் சிலைகள், உத்தரபிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்பட்டு அவருக்கு மார்பளவுச் சிலை, வன்னிய சமுதாயத்தின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில், அன்றைய ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சமூகநீதித் தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிலைகளுடன் மணிமண்டபம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 14 தியாகிகளுக்கான நினைவு மண்டபம், திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்குச் சிலையுடன் அரங்கம், கடலூரில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை, திரு.இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலை, புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சிலை, நாமக்கல் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் சிலை, திரு. டி.எம்.சௌந்திரராசன், டாக்டர் ப.சுப்பராயன், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார், விடுதலைப் போரில் களம் கண்ட வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெண்ணி காலாடி, வீரன் வாளுக்கு வேலி அம்பலம், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர் சிலை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், வீரமாமுனிவர், இனமானப் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன், ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பலரது தியாகத்தையும் தொண்டையும் புகழையும் மதித்துப் போற்றி சிலைகளும் நினைவிடங்களும் அமைத்தததோடு, வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் புதுப்பித்து, பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளில் தமிழ் வார விழா கொண்டாடி, குமரியின் வள்ளுவ முனையில் வானுயர எழுந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை கொண்டாடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்து, திராவிட மாடல் ஆட்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் திருவாளர்கள் பி.கே.மூக்கையா தேவர், டபிள்யூ.பி.ஏ.சௌந்திரபாண்டியனார், சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், கே.பழனிசாமி கவுண்டர், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், மாயூரம் வேதநாயகம், பெரியவர் இளையபெருமாள், திரு.இமானுவேல் சேகரன், தோழர் ப.ஜீவானந்தம், கொடிகாத்த குமரன், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி, அறிவியலாளர் ஜி.டி.நாயுடு, தமிழ் அச்சுத்துறையின் முன்னோடி சீகன் பால்கு, பட்டுக்கோட்டை வை.நாடிமுத்து பிள்ளை, பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா, கரூர் சி.முத்துசாமி ஆகியோருக்கான சிலைகள் மற்றும் அவர்கள் பெயரிலான நினைவிடங்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஆகியோருக்குத் திருவுருவச் சிலைகள் என சிறப்பு செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசை வாழ்த்தி, நாடும் மொழியும் மானுட சமுதாயமும் சிறந்து வாழ, நாளும் உழைத்தவர்களின் நினைவை இப்பொதுக்குழு போற்றிப் புகழ்கிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || LAUGFS கேஸ் அதிரடி அறிவிப்பு

Next Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர் | French Open Tennis Jannik Sinner in the 4th round

Next Post
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர் | French Open Tennis Jannik Sinner in the 4th round

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர் | French Open Tennis Jannik Sinner in the 4th round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin