SINGAPORE: இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரியில் இருந்த பத்து பயணிகள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அது வெளிநாட்டு ஊழியர்களை (Migrant workers) ஏற்றிச்செல்லும் லாரி என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஏழு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று (மே 31) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து… இந்திய ஓட்டுநர் உயிரிழப்பு?
துவாஸை நோக்கி செல்லும் AYE விரைவுச்சாலையில் கடந்த மே 29 அன்று காலை 8.30 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை மற்றும் SCDF கூட்டாக தெரிவித்தன.
இதில் எட்டு பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும், மேலும் இரண்டு பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 26 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,காவல்துறை விசாரணைகளுக்கு 34 வயதான லாரி ஓட்டுநர் உதவி வருகிறார்.
பயணிகளை ஏற்றிச் சென்ற லாரிகள் தொடர்புடைய விபத்துக்கள்
2023 ஜூலை முதல் 2024 ஜனவரி வரை, பின்னால் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரிகள் தொடர்புடைய 49 விபத்துக்கள் நடந்துள்ளதாக, உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதில் 168 பேர் காயமடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, லாரியின் பின்னால் இருந்த பயணிகளில் 127 பேர் இவ்வாறான விபத்துகளில் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் எந்தவித பெரிய காயமும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Top Photo: SHIN MIN DAILY NEWS
இதையும் படிங்க…
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!
சிங்கப்பூரில் கனமழை: லாரி மீது முறிந்து விழுந்த பெரும் மரம் – லாரி ஊழியர்களின் நிலை?
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்குமா லாரி பயணம்? – நிறுவனங்கள் புலம்புவது ஏன்?

