படாங் அருகே உள்ள வேலையிடத்தில் நேற்று மே 30 அன்று உயரத்தில் இருந்து கீழே விழுந்த 43 வயதுமிக்க ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் ஃப்ரீலான்ஸ் ஊழியராக வேலை செய்து வந்ததாகவும் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்ததாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்
அதாவது, கொன்னாட் டிரைவில் (Connaught Drive) உள்ள 18 மீட்டர் உயர எஃகு கோபுரத்திலிருந்து கீழே இறங்கும்போது அந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்த நினைவூட்டலாக, உயரமான எஃகு கோபுரங்களில் இருந்து இறங்கும் ஊழியர்கள் பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் கூறியது, சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அது சொன்னது.
அவர் ஷோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் MOM கூறியது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து… இந்திய ஓட்டுநர் உயிரிழப்பு?
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்

