சிங்கப்பூர் ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை நாளை ஜூன் 1 ஆம் தேதி முதல் விரிவுப்படுத்தவுள்ளது.
அதாவது ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதற்கான Non-traditional source (NTS) என்னும் நாடுகளின் பட்டியலை சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது என்று நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது
அதன் அடிப்படையில் புதிததாக சில நாடுகளை அது சேர்க்கவுள்ளது. அதில் பூட்டான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் இணையும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் நாளை ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பட்டியலில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அதோடு மேற்குறிப்பிட்ட 3 நாடுகளும் சேர்க்கப்படும்.
இந்த NTS பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை, ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியின்கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முதலாளிகள் வேலைக்கு அமர்த்தலாம்.
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
மேலும் NTS பட்டியலில் பின்வரும் வேலைவாய்ப்புகளும் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) குறிப்பிட்டுள்ளது.
- சமையல்காரர்கள்
- கனரக வாகன ஓட்டுநர்கள் (செல்லுபடியாகும் கனரக வாகன உரிமம் Class 4 மற்றும் Class 5 வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கு)
- உற்பத்தித் துறை ஆபரேட்டர் (Manufacturing operator)
மேற்சொன்ன இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1, 2025 முதல் நடப்புக்கு வரும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த NTS வேலைவாய்ப்புகளில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் செப்டம்பர் 1-க்கு முன்பு வெளியாகும்.
தொடர்ந்து நம் “தமிழ் டெய்லி சிங்கப்பூர்” தளத்துடன் இணைப்பில் இருங்கள்.
சிங்கப்பூரில் புளாக்கில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாப மரணம் – மன அழுத்தம் காரணமா?
The post ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல் appeared first on Tamil Daily Singapore.

