Last Updated:
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சிலர் பலவீனப்படுத்துவதாகவும், பாஜகவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி கவிதா தனது தந்தை சந்திரசேகர ராவிற்கு எழுதிய கடிதம் கசிந்தது.
பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க தனது சகோதரர் கேடி ராமாராவ் திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய கவிதா, விரைவில் புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில், கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் கேடி ராமாராவ் மற்றும் கவிதா இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சிலர் பலவீனப்படுத்துவதாகவும், பாஜகவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி கவிதா தனது தந்தை சந்திரசேகர ராவிற்கு எழுதிய கடிதம் கசிந்தது.
கடிதத்தைக் கசியவிட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ள கவிதா, பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க தனது சகோதரர் கேடி ராமாராவ் முயற்சித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறை சென்ற கவிதா, தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருந்து வருகிறார்.
இச்சூழலில் பாஜகவை தந்தை கடுமையாக விமர்சிக்காததையும் கடிதத்தில் கவிதா குறிப்பிட்டிருந்தார். இதனால் விரைவில் சொந்தக் கட்சியைத் தொடங்க கவிதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hyderabad,Hyderabad,Telangana


