• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக சரிவு – 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி! | GDP growth slows to 6.5% in 2024-25, slowest since the pandemic

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக சரிவு – 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி! | GDP growth slows to 6.5% in 2024-25, slowest since the pandemic
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக சரிந்துள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது. கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. அதேவேளையில், 2024-25 நிதியாண்டின் இறுதி காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது ஓரளவு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2024–25 நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும், அதே ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.

2024-25-ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக அதிகரித்துள்ளது. இது ஆண்டின் மிக வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். 3-ஆம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருந்தது. இருப்பினும், 2024-25-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டின் வளர்ச்சி, முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டில் காணப்பட்ட 8.4%-ஐ விட குறைவாகும்.

வேளாண்மை, கால்நடைகள், மீன்பிடித்தல் துறை நான்காவது காலாண்டில் 5.4% வளர்ச்சியடைந்தது. இது 2023-24-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.9% ஆக இருந்தது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.8% ஆக இருந்தது. இது ஆண்டின் இரண்டாவது வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். இது முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில் 11.3% என்ற அளவில் அதிகமாக இருந்தது.

நான்காவது காலாண்டில் கட்டுமானத் துறை இரட்டை இலக்க வளர்ச்சியை 10.8% ஆக மீண்டும் எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் வேகமான வளர்ச்சியாகும். மேலும், 2023-24 ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் காணப்பட்ட 8.7% ஐ விட இது அதிகம். இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2024-25 நிதியாண்டில் ரூ. 187.97 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023–24-ல் ரூ.176.51 லட்சம் கோடியாக இருந்தது.

  • கடந்த 5 நிதியாண்டுகளின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் வருமாறு:
  • 2020-21: -5.8%
  • 2021-22: 9.7%
  • 2022-23: 7.6%
  • 2023-24: 9.2%
  • 2024-25: 6.5%



Read More

Previous Post

Tamilmirror Online || பொம்மைக்குள் போதைப்பொருள் : இத்தாலிய பிரஜை கைது

Next Post

‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ – அஸ்வின் வார்னிங் | If Mumbai reaches final RCB s trophy dream will over Ashwin warns ipl 2025

Next Post
‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ – அஸ்வின் வார்னிங் | If Mumbai reaches final RCB s trophy dream will over Ashwin warns ipl 2025

‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ - அஸ்வின் வார்னிங் | If Mumbai reaches final RCB s trophy dream will over Ashwin warns ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin