• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை | New trade deal with US: Union Commerce Minister Piyush Goyal

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை | New trade deal with US: Union Commerce Minister Piyush Goyal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதிருப்பூர்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல், டெல்லியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று (மே 30) சந்தித்தார். தொடர்ந்து ஆயத்த ஆடை துறையின் தற்போதைய நிலை, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசினர். இதில் தொழில்துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு தொடர்ச்சியாக பியூஷ் கோயல் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பிலும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் இருதரப்புச் வர்த்தக பேச்சு வார்த்தைகள் குறித்தும் தகவல் கேட்டறிந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக நடைபெற்று வருவதையும், பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்பிக்கை அளித்துள்ளார். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.சக்திவேல் கூறியது: “மிகவும் பயனுள்ள மற்றும் உற்சாகமான சந்திப்பாக இது அமைந்தது. அரசின் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவில் நிறைவேற்றும் முயற்சிகள், நம் தொழில்துறைக்கு புதிய நம்பிக்கையையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அளிக்கின்றன. இந்த சாதகமான சூழலில் அனைத்து உறுப்பினர்களும், நிறுவன விரிவாக்கம் நோக்கி தயாராக வேண்டும். தற்போதைய சந்தை சூழ்நிலை வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளதால், அனைத்து ஏற்றுமதியாளர்களும் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில்துறையை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.



Read More

Previous Post

“ஆர்சிபி கோப்பையை வென்றால்… பொது விடுமுறை…” – முதல்வர் சித்தராமையாவுக்கு ரசிகர் எழுதிய கடிதம் வைரல்

Next Post

பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை… விரைவில் அமலாக உள்ள புதிய விதி… எங்கு தெரியுமா…?

Next Post
பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை… விரைவில் அமலாக உள்ள புதிய விதி… எங்கு தெரியுமா…?

பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை... விரைவில் அமலாக உள்ள புதிய விதி... எங்கு தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin