மாண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறதா. பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி மற்றும் மே 7-ம் தேதி என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவே கெளடா தலைமையிலான ஜேடிஎஸ் கடந்தாண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
இந்த நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் பாஜக மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

