கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நிதியாண்டைக் காட்டிலும் வங்கி மோசடி செய்யப்பட்ட தொகை மூன்று மடங்காகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 – 25ஆம் நிதியாண்டில், வங்கி மோசடி வழக்குகள் குறைந்திருந்தாலும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், மோசடி செய்யப்பட்டத் தொகையானது மும்மடங்காக உயர்ந்திருப்பதாக ஆண்டு அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், நிதி மோசடி குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் நடைமுறை பற்றிய தீர்ப்பையடுத்தே, முந்தைய காலக்கட்டங்களில் நடைபெற்ற வழக்குகளை மறுவகைப்படுத்தல் மற்றும் புதிதாக வழக்குகளை சேர்த்தால் காரணமாக இந்தளவுக்கு மோசடித் தொகை அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டில் 36,060 வங்கி மோசடி வழக்குகள் பதிவான நிலையில், தற்போது 23,953 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மோசடி செய்யப்பட்ட தொகை கடந்த ஆண்டு வெறும் 12,230 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது.

