தமிழகத்தில் அதிகரித்துள்ள குற்றங்கள்
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, அவர்களில் சிலர் உயிரிழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, தனியாக வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படுவதும், அவர்களிடமிருந்து நகைகள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடுவதாக ஸ்டாலின் அரசின் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

