Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அலிபுர்துவார் பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில், பயங்கரவாதிகளால் 26 பேர் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது, இந்திய ராணுவம், முதல் முறையாக “ரெட் டீமிங்” என்ற வியூகத்தைப் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அலிபுர்துவார் பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசிய அவர், குங்குமத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் உள்ள கலாசாரத் தொடர்பைக் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்ற அவர், 140 கோடி இந்தியர்கள் சார்பாக இதை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவை ஒரு பயங்கரவாதி தாக்கினால் அதற்காக மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும் என உலகிற்குக் கூறியதாகவும் பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்குள் புகுந்து மூன்று முறை இந்திய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் இனப்பெருக்கக் களமாக பாகிஸ்தான் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
May 30, 2025 10:09 AM IST


