• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முதல்வர் யோகி அரசின் சுற்றுச்சூழல் கொள்கையின் தாக்கம்: உ.பி.யில் மின் வாகன விற்பனை அதிகம் | Electric vehicle sales in UP are higher than Delhi and Maharashtra

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
முதல்வர் யோகி அரசின் சுற்றுச்சூழல் கொள்கையின் தாக்கம்: உ.பி.யில் மின் வாகன விற்பனை அதிகம் | Electric vehicle sales in UP are higher than Delhi and Maharashtra
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இதுவரை 4.14 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மின் ரிக்ஷா, சிறிய மற்றும் பெரிய கார்கள் அடங்கும். இது நாட்டின் பிற மாநிலங்களைவிட அதிகம் ஆகும். தலைநகர் டெல்லியில் 1.83 லட்சம் மின்சார வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1.79 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைதான் காரணம் என கூறப்படுகிறது.

உத்தர பிரதேச அரசு ‘புதிய மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கையை’ 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் மாநிலத்தை மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியின் மையமாக மாற்றவும், ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 10 லட்சம் வேலைகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்தல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல் மற்றும் மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கிய உத்திகளை உ.பி. அரசு வகுத்துள்ளது. அயோத்தி, வாராணசி, மதுரா, பிரயாக்ராஜ், நொய்டா, காஜியாபாத், லக்னோ மற்றும் கான்பூர் போன்ற நகரங்களில் இயங்கும் மின்-ரிக்ஷாக்கள் மட்டும் மின்சார வாகன சந்தையில் 85% பங்கு வகிக்கின்றன. இந்த வாகனங்கள் மாசு இல்லாதவை மட்டுமல்ல, ஏழை மக்களை சுயசார்புடையவர்களாக மாறவும் உதவுகின்றன.

இம் மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் அதற்கான சார்ஜிங் நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 16 நகராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய சார்ஜிங் நிலையங்களை உருவாக்க அரசு முடிவு செய்தது. இவற்றில் பெரும்பாலானவை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அதிக நடமாட்டம் உள்ள அயோத்தியில் அமைக்கப்படுகின்றன.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்திய அரசின் FAME (விரைவான மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல்) திட்டத்தின் கீழ் உ.பி. மிகப்பெரிய பயனாளியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது தேவையை அதிகரித்துள்ளது.

எனினும், சிறிய, பெரிய மின்சார கார் கார்கள் விற்பனையில் மகராஷ்டிரா (90,870) முதலிடம் பிடித்துள்ளது. உ.பி.யில் 66,913, டெல்லியில் 22,960, கர்நாடகாவில் 55,823 மற்றும் தமிழ்நாட்டில் 44.909, மின் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.



Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்! | french open jannik sinner advanced to third round

Next Post

பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் | India hit airbases with BrahMos before Pak could act, admits Shehbaz Sharif

Next Post
பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் | India hit airbases with BrahMos before Pak could act, admits Shehbaz Sharif

பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் | India hit airbases with BrahMos before Pak could act, admits Shehbaz Sharif

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin