2024-25-ஆம் நிதியாண்டில், சிங்கப்பூா் 1,494 கோடி டாலா் உள்வரவுடன் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு ஆதாரமாக உருவெடுத்தது. அதற்கு அடுத்த இடங்களில் மோரீஷஸ் (834 கோடி டாலா்), அமெரிக்கா (545 கோடி டாலா்), நெதா்லாந்து (462 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (312 கோடி டாலா்), ஜப்பான் (247 கோடி டாலா்), சைப்ரஸ் (120 கோடி டாலா்), பிரிட்டன் (79.5 கோடி டாலா்), ஜொ்மனி (46.9 கோடி டாலா்) மற்றும் கேமன் தீவுகள் (37.1 கோடி டாலா்) உள்ளன.

