• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்தார் குகேஷ்! | gukesh loses to Arjun Erigaisi norway chess

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்தார் குகேஷ்! | gukesh loses to Arjun Erigaisi norway chess
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வி அடைந்தார்.

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தோல்வி அடைந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார் குகேஷ். அர்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் களமிறங்கினர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி 62-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 21 வயதான அர்ஜூன் எரிகைசி 2,801 ரேட்டிங் புள்ளிகளை பெற்று வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை குவித்தவர்களின் பட்டியலில் 15-வது இடத்தை பிடித்தார். அதேவேளையில் அதிக ரேட்டிங்களை புள்ளிகளை குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த் 2,800 புள்ளிகளை கடந்திருந்தார்.

2 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஹிகாரு நகமுரா தனது 2-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேடான் விளையாட்டில் ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு 1.5 புள்ளிகள் கிடைத்தது. குகேஷ் புள்ளிகள் கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளார். கார்ல்சன் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பேபியானோ கருனா 3 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், சீனாவின் வெயி யி 1 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளார்.



Read More

Previous Post

’ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டிக்களை அமைத்து முடிக்க வேண்டும்’ அதிமுக மா.செக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Next Post

பல வருட இழப்புகளுக்குப் பிறகு 542 கோடி ரூபாய் லாபம்…! சாதித்துக் காட்டிய BSNL நிறுவனம்…!

Next Post
பல வருட இழப்புகளுக்குப் பிறகு 542 கோடி ரூபாய் லாபம்…! சாதித்துக் காட்டிய BSNL நிறுவனம்…!

பல வருட இழப்புகளுக்குப் பிறகு 542 கோடி ரூபாய் லாபம்...! சாதித்துக் காட்டிய BSNL நிறுவனம்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin