Last Updated:
சில யூசர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி மிக சரியானது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என கூறியுள்ளார்கள்.
கஜகஸ்தானில் நடந்த ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய வீரருக்கு கைகுலுக்க மறுத்த பாகிஸ்தானிய வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்திய வீரரை ஓங்கி அடிப்பது போல் கை குலுக்கியது குறித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆசிய ஓசியானா பிரிவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் போட்டிகளில் பிரகாஷ் சாரன், தாவிஷ் பாஹ்வா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், போட்டி முடிந்ததும், இந்திய வீரருக்கு முதல் முறை கை குலுக்க மறுத்ததுடன், வெறுப்புடன் இரண்டாவது முறை கைகுலுக்கினார். இந்த வீடியோ அனைத்து தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உதவியுடன் நடத்தப்பட்ட பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவை விமர்சிக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானை சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த டென்னிஸ் வீரர் செய்துள்ள செயல் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை கண்டித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சில யூசர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி மிக சரியானது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என கூறியுள்ளார்கள்.


