• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு… ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையைப் பெறுவது எப்படி…?

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு… ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையைப் பெறுவது எப்படி…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2025 4:25 PM IST

70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதிலான இந்திய குடிமக்கள் எவரும் ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் பலன்களை பெற்று வருபவர்களுக்கு இது ஒரு கூடுதல் டாப்-அப் போல செயல்படும்.

News18News18
News18

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், அக்டோபர் 2024இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை என்பது இந்தியாவில் உள்ள 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமானம் அல்லது முந்தைய தகுதி வரம்பை கருத்தில் கொள்ளாமல் 5 லட்ச ரூபாய்க்கான இலவச ஆரோக்கிய காப்பீட்டை வழங்குகிறது.

இந்த முயற்சியானது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எந்த ஒரு காத்திருப்பு காலமும் இல்லாமல் பாலிசியைப் பெறுவதற்கு முன்பே இருக்கக்கூடிய மருத்துவ நிலைகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ செயல்முறைகளுக்கான விரிவான காப்பீட்டை வழங்குகிறது.

இந்த அட்டையை யாரெல்லாம் பெறலாம்?

70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதிலான இந்திய குடிமக்கள் எவரும் இந்த அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் பலன்களை பெற்று வருபவர்களுக்கு இது ஒரு கூடுதல் டாப்-அப் போல செயல்படும். இதனால் அவர்கள் பெரும் காப்பீட்டு பலன் என்பது இரட்டிப்பாகும். மேலும் தனியார் இன்சூரன்ஸ் அல்லது பிற அரசு உடல்நல திட்டங்கள் மூலமாக பலன் பெற்று வருபவர்களும் தாராளமாக இந்த அட்டையைப் பெறலாம். ஆனால், இரண்டு திட்டங்களில் எதன் மூலமாக பலன் பெற விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

முக்கியமான நன்மைகள்:

  • 5 லட்ச ரூபாய்க்கான ஆண்டுவாரியான ஆயுள் காப்பீடு
  • 27 சிறப்பு பிரிவுகளின் கீழ் 1961 மருத்துவ செயல்முறைகளுக்கான காப்பீட்டை வழங்குகிறது.
  • முதல் நாளிலிருந்து பாலிசிதாரருக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளையும் கருத்தில் கொள்கிறது.
  • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணம் இல்லாத சிகிச்சையை வழங்குகிறது. இதில் 13,352 தனியார் மருத்துவமனைகளும் அடங்கும்.

ஆயுஷ்மான் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பதிவு செய்வது எப்படி?

  • கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று ஆயுஷ்மான் ஆப் (Ayushman app) என்று டைப் செய்து அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள்.
  • லாகின் ஆஸ் பெனிஃபீஷியரி’ அல்லது ‘ஆபரேட்டர்’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • கொடுக்கப்பட்டுள்ள கேப்சா குறியீடு, மொபைல் நம்பரை என்டர் செய்து, உங்களுக்கு விருப்பமான சரிபார்ப்பு செயல்முறையை தேர்வு செய்யவும்.
  • OTP-ஐ என்டர் செய்து, மீண்டும் கேப்சா குறியீட்டை டைப் செய்யுங்கள்.
  • பிறகு லாகின் என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய சாதனத்தின் லொகேஷனை இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குங்கள்.
  • ஆதார் மற்றும் மாநில விவரம் உட்பட பயன்பெறுவோர் விவரங்கள் அனைத்தையும் என்டர் செய்ய வேண்டும்.
  • பயன்பெறுவோர் பெயர் காட்டாத பட்சத்தில் OTP சரிபார்ப்பு முறை மூலமாக eKYC செயல்முறையை நிறைவு செய்யவும்.
  • உறுதிமொழி படிவத்தை நிரப்பி தேவையான விவரங்களை வழங்கவும்.
  • பயன்பெறுவோருக்கான மொபைல் நம்பர் மற்றும் OTP-ஐ சமர்ப்பிக்கவும்.
  • அஞ்சல் குறியீடு மற்றும் பிரிவு போன்ற விவரங்களை என்டர் செய்யுங்கள்.
  • தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து மேலும் தொடரவும்.
  • eKYC செயல்முறையை நிறைவு செய்த பிறகு ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை உங்களுக்கு டவுன்லோட் செய்வதற்கு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

  • ஹீமோ டயாலிசிஸ் அல்லது பெரிடோனியல் டயாலிசிஸ்
  • மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
  • PTCA மற்றும் பேஸ்மேக்கர் பொருத்துதல் உட்பட இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்
  • பக்கவாதம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு
  • எலும்பியல் அறுவை சிகிச்சைகள்

இந்த அட்டையை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அரசு மூலமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள 30,072 மருத்துவமனைகளில் அட்டைதாரர்கள் பயன் பெறலாம். இது இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு… ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையைப் பெறுவது எப்படி…?

Read More

Previous Post

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் திடீர் திருப்பம்: தாய்க்கு அனைத்தும் தெரியும்!

Next Post

ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை – Malaysiakini

Next Post
ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை – Malaysiakini

ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin