Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தீயுடன் விளையாடி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
உக்ரைனுடனான போரை நிறுத்த மறுத்துவரும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தீயுடன் விளையாடி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர், 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
எனினும், 30 உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா அண்மையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இது தனக்காக அல்ல என்பதை விளாதிமிர் புதின் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு ஏற்கனவே ஏராளமான மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கும் என்றும், தீயுடன் புதின் விளையாடிவருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றபோது, புதினுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனால், போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துவருவதால், டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.


