Last Updated:
லீக் சுற்றில் இன்று கடைசி போட்டியாக பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஆட்டம் லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய ராணுவத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள மரியாதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
பாகிஸ்தான் உதவியோடு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லையில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை மூன்று நாட்களாக நடத்தியது.
இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான பாகிஸ்தான் பணிந்தது. மேலும் பொருளாதார ரீதியிலும் இந்தியா பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருந்தது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய இந்திய ராணுவத்தை பாராட்டும் வகையில் நாடு முழுவதும் வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய ராணுவத்திற்கு மரியாதை வழங்கி கௌரவப்படுத்துகிறது. அந்த வகையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசிக்குமாறு இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பிசிசிஐ இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகளை வழங்கி அழைப்பு விடுத்திருக்கிறது.
பிசிசிஐயின் இந்த நடவடிக்கையை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி உள்ளார்கள். ராணுவ நடவடிக்கையின் போது மே 9-ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றில் இன்று கடைசி போட்டியாக பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஆட்டம் லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


