பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பிரபல பாதாள உலகக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு 3 போலி கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை கெஹல்பத்தர பத்மே கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

