பியூப்கோ (Puebco) என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரிக்கும் இந்த ஜோல்னா பையை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் (விலை+ஷிப்பிங்) 48 அமெரிக்க டாலர்கள், அதாவது 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அவர்கள் தயாரித்துள்ள பைகளில் இந்தி எழுத்துக்களால் புகழ்பெற்ற இந்திய உள்ளூர் தயாரிப்புகளின் பெயர்களை அச்சிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இந்திய கலாசாரத்தைத் தெரிவிக்கும் பொருளாக மாறியுள்ள ஜோல்னா பைக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது உள்ளூர் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. “இதை யார் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்” எனத் திகைக்கின்றனர்.
நாம் பொருட்கள் வாங்கும்போது இலவசமாகவும், அதிகபட்சம் 100 ரூபாய்க்குள்ளும் வாங்கும் பையை 48 டாலருக்கு விற்பது பற்றி இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

