• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF மற்றும் லோன்களுக்கு Cancelled செக்கை வங்கிகள் பெறுவதற்கான காரணம் என்ன…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
PF மற்றும் லோன்களுக்கு Cancelled செக்கை வங்கிகள் பெறுவதற்கான காரணம் என்ன…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேன்சல் செய்யப்பட்ட செக்கைப் பயன்படுத்தி, அதற்கு மேற்பட்டு யாருக்கும் பேமெண்ட் செலுத்த முடியாது என்றாலும் கூட, ‘Cancelled’ என்ற வார்த்தை அடங்கிய செக் என்பது பல்வேறு அலுவலக மற்றும் வங்கி செயல்முறைகளில் முக்கியமான ஒன்றாக அமைகிறது. உதாரணமாக, சம்பள வங்கிக் கணக்கு திறப்பதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் கிளைம்களுக்குகூட இது பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த செயலற்ற செக்கை முக்கியமானதாக மாற்றுவது எது மற்றும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தொடர்ந்து கேன்சல் செய்யப்பட்ட செக்கை கேட்பதற்கான காரணம் என்ன?

கேன்சல்டு செக் என்பது வழக்கமாக குறுக்கு வாட்டத்தில் ‘CANCELLED’ என்ற வார்த்தை கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் ஒரு செக் ஆகும். இதில், கையெழுத்து தேவை இல்லை. இந்த செக்கை பயன்படுத்தி ஒருவரால் பணத்தை வித்ட்ரா செய்ய முடியாவிட்டாலும், இது வேறு சில முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு அக்கவுண்ட் இருப்பதை உறுதி செய்வதற்கு இது ஒரு நிரூபணமாக அமைகிறது மற்றும் அக்கவுண்ட் நம்பர், IFSC கோட், MICR கோட், வங்கி கிளையின் பெயர் மற்றும் அக்கவுண்ட் ஹோல்டரின் அடையாளம் ஆகிய சரிபார்க்கப்பட்ட விபரங்களை வழங்குகிறது.

இந்த சரிபார்ப்பு முறை என்பது வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. இதன் மூலமாக பணம் சரியான அக்கவுண்டில் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

கேன்சல் செய்யப்பட்ட செக் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

சேலரி அக்கவுண்ட் திறக்க:

புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களின் வங்கி விவரங்களை சரிபார்ப்பதற்கு நிறுவனங்கள் கேன்சல் செய்யப்பட்ட செக்கை பெறுகின்றன.

பிராவிடண்ட் ஃபண்ட் வித்ட்ரா செய்வதற்கு (PF) அல்லது டிரான்ஸ்ஃபர் செய்ய:

இது PF பணம் சரியான கணக்கில் கிரெடிட் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

கடன் EMI மற்றும் SIP ஆட்டோ டெபிட்:

ஒவ்வொரு மாதமும் பேமெண்ட்களை ஆட்டோ-டெபிட் செய்வதற்கு வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை பயன்படுத்துகின்றன.

இன்சூரன்ஸ் கிளைம்கள்:

பணம் கிரெடிட் செய்யப்பட வேண்டிய அக்கவுண்ட்டை உறுதி செய்வதற்கு பயன்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்:

ஆரம்பத்தில் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு இது ஆதென்டிகேஷன் செயல்முறைக்கு உதவுகிறது.

கடன் விண்ணப்பங்கள்:

கடன்களை அங்கீகரிப்பதற்கு முன்பு வங்கிகள் அக்கவுண்ட் விவரங்களை சரிபார்க்க இது உதவுகிறது.

டிமேட் அக்கவுண்ட் திறப்பதற்கு:

ஷேர் டிரேடிங் சம்பந்தப்பட்ட வங்கி இணைப்புகளுக்கு இது அத்தியாவசியமானது. எந்த ஒரு பொருளாதார பரிமாற்றத்தில் ஈடுபடாவிட்டாலும் இந்த செக் என்பது பல்வேறு சைபர் மோசடிகளில் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேன்சல் செய்யப்பட்ட செக்கை கோருவதற்கான முதன்மையான காரணம் என்பது பணம் டிரான்ஸ்ஃபர் செய்யும்போது தவறு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுப்பதற்காகும்.

கேன்சல் செய்யப்பட்ட செக்கை பயன்படுத்தும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில தடுப்பு நடவடிக்கைகள்:

  • ஒருபோதும் கேன்சல் செய்யப்பட்ட செக்கில் கையெழுத்திட வேண்டாம்.
  • நம்பகமான நிறுவனங்களுக்கு மட்டுமே கேன்சல்டு செக்கை வழங்கவும்.
  • எப்பொழுதும் நீலம் அல்லது கருப்பு நிற மை கொண்டு Cancelled என்று எழுதுங்கள். ஏனெனில் பிற நிறங்களை வங்கிகள் நிராகரித்துவிடும்.
  • எப்பொழுது, எங்கு, ஏன் மற்றும் யாருக்கு கேன்சல் செய்யப்பட்ட செக்கை வழங்குகிறீர்கள் என்பதை கவனிக்கவும்.
  • கேன்சல் செய்யப்பட்ட செக்கை தவறுதலாக எங்கேயாவது வைத்துவிட்டால் வங்கியிடம் அதை தெரிவித்து, உடனடியாக உங்களுடைய செக் புக்கிலிருந்து அது சம்பந்தமான செக் நம்பரை அடித்துவிட்டு, புதிய ஒன்றை வழங்கவும்.
  • தமிழ் செய்திகள்/வணிகம்/

    PF மற்றும் லோன்களுக்கு Cancelled செக்கை வங்கிகள் பெறுவதற்கான காரணம் என்ன…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    Read More

    Previous Post

    இந்திய அணியில் இடம்பெறாத முகமது ஷமிக்கு எஸ்ஆர்எச் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆதரவு!

    Next Post

    கொள்ளையடிக்கப்படும் நகைகள் யாரிடம் விற்கப்படுகின்றன?

    Next Post
    கொள்ளையடிக்கப்படும் நகைகள் யாரிடம் விற்கப்படுகின்றன?

    கொள்ளையடிக்கப்படும் நகைகள் யாரிடம் விற்கப்படுகின்றன?

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin