• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: நிதி ஆயோக் சிஇஓ சொல்வது என்ன? | India Surpasses Japan To Become World Fourth-Largest Economy: NITI Aayog CEO

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: நிதி ஆயோக் சிஇஓ சொல்வது என்ன? | India Surpasses Japan To Become World Fourth-Largest Economy: NITI Aayog CEO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியம் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதன் காரணமாக 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது.

உலக பொருளாதார வரிசையில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது இந்தியாவுக்கு பின்தள்ளப்பட்டு 5-வது இடத்தில் உள்ளது.

திட்டமிடப்பட்ட மற்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் நாம் உறுதியுடன் செயல்பட்டால் இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்.

சொத்துக்களை பணமாக்குவதற்கான இரண்டாம் சுற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “ வரி விகிதம் எப்படி இருக்கும் என்பது நிச்சயமற்றது. இருப்பினும், உலகளவில் மலிவான விலையில் பொருட்களை தயாரிப்பதற்கு சிறந்த இடமாக இந்தியா இருக்கும்” என்றார் நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம்.



Read More

Previous Post

இந்திய டெஸ்ட் அணியில் எந்தெந்த ஐபிஎல் அணிகளில் இருந்து எத்தனை வீரர்களுக்கு இடம் கிடைத்தது?

Next Post

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Next Post
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin