• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்’ – பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்’ – பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 7:29 AM IST

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நிலையில், பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி, இருநாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டது.

கடந்த மே 7,8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த மோதலையடுத்து, இருநாடுகளும் சமரசமானது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜக அரசியல் தலைவர்கள் கூறியது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 20 மாநிலத்தின் முதலமைச்சர்கள், 18 துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் பொதுவெளியில் அநாகரீகமாக பேசக்கூடாது என்றும், தேவையற்ற கருத்துகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய பிரதேச துணை முதலமைச்சர் ஜெகதீஷ் தேவ்தா மற்றும் அமைச்சர் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், பிரதமர் மோடி இத்தகைய அறிவுரையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 122 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல என்றும், முன்னேற்றமடைந்து வரும் இந்தியாவின் நிலையை அது வெளிக்காட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

யாழ். மக்களே அவதானம் – கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய பண மோசடி

Next Post

இந்திய டெஸ்ட் அணியில் எந்தெந்த ஐபிஎல் அணிகளில் இருந்து எத்தனை வீரர்களுக்கு இடம் கிடைத்தது?

Next Post
இந்திய டெஸ்ட் அணியில் எந்தெந்த ஐபிஎல் அணிகளில் இருந்து எத்தனை வீரர்களுக்கு இடம் கிடைத்தது?

இந்திய டெஸ்ட் அணியில் எந்தெந்த ஐபிஎல் அணிகளில் இருந்து எத்தனை வீரர்களுக்கு இடம் கிடைத்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin