• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : அபார வெற்றியுடன் தொடரிலிருந்து விடைபெற்ற ஐதராபாத் அணி

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 : அபார வெற்றியுடன் தொடரிலிருந்து விடைபெற்ற ஐதராபாத் அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 6:48 AM IST

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதிய போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 16 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இணைந்த ஹெட் – கிளாசன் இணை கொல்கத்தா பவுலிங்கை வெளுத்து வாங்கியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 40 பந்துகளை எதிர்கொண்ட ஹெட் தலா 6 சிக்சர் பவுண்டரியுடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெய்ன்ரிக் கிளாசன் 37 பந்துகளில் சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 278 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குவின்டன் டி காக் 9 ரன்களும், சுனில் நரைன் 31 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரஹானே 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அங்ரிஷ் ரகுவன்ஷி 14 ரன்களும், மனிஷ் பாண்டே 37 ரன்களும் சேர்த்தனர். பவுலர் ஹர்ஷித் ரானா 21 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடப்பு தொடரில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் 14 லீக் போட்டிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளன. இதில் ஐதராபாத் 13 புள்ளிகளையும், கொல்கத்தா 12 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Read More

Previous Post

பாகிஸ்தானுக்கு 2015-ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: அமெரிக்காவில் சசி தரூர் கருத்து | Pakistan was given a last chance in 2015: Shashi Tharoor in US

Next Post

சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

Next Post
சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin