பொதுவாக ஒரு நிதியாண்டின் ஆரம்பத்திலேயே வரியை திட்டமிடுவது சிறந்தது, ஆனால் இப்போது கூட அதனை நீங்கள் செய்ய முடியும். கடைசி தேதி வரை காத்திருக்க தேவையில்லை. வரி சேமிப்பு திட்டங்களை உங்களுடைய ஒட்டுமொத்த பொருளாதார திட்டமிடலின் ஒரு பகுதியாக கருதாமல், அதனை தனிப்பட்ட ஒரு செயல்பாடாக நீங்கள் கருதுகிறீர்கள் என்றால் நீங்கள் பணத்தை இழக்க வழிவகுக்கும் பல்வேறு தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறான ஒரு சில தவறுகள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
80C கழிவுத்தொகைக்கு தகுதி பெறும் ஏற்கனவே இருக்கக்கூடிய முதலீடுகளை தவிர்த்தல்
உங்களுக்கு எந்த வரி சேமிப்பு திட்டம் ஏற்றதாக இருக்கும் என்பதை அடையாளம் காண்பதற்கு முன்பு இதுபோன்ற முதலீடுகளை நீங்கள் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை நீங்கள் மாத வருமானம் பெறக்கூடிய எம்ப்ளாயியாக இருந்தால் எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் பங்களிப்பு ஓரளவு உங்களுக்கு வரி சேமிப்பை பெற்று தரும். பலர் 1.5 லட்ச ரூபாய் வரம்பை அடைய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு விதமான வரி சேமிப்பு முதலீடுகளை செய்வது உண்டு. அது முற்றிலுமாக தவறு.
EPF பங்களிப்பை தவிர உங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு நீங்கள் செலுத்திய பள்ளி கட்டணத்தையும் கருத்தில் கொள்ளலாம்.
அவசர அவசரமாக நீண்டகால முதலீட்டுடன் வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது
முதலீட்டுடன் வரும் இன்சூரன்ஸ் பாலிசிகள் பொதுவாக நீண்ட கால அளவை கொண்டதாகவும், தொடர்ந்து நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டிய கட்டாயத்துடன் வரும். அடுத்தடுத்த வருடங்களில் உங்களால் பிரீமியம் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம். இதன் காரணமாக பாதியிலேயே நீங்கள் பாலிசியை மூடுவதற்கு முடிவு செய்தால் நீங்கள் செலுத்திய பிரீமியம் தொகையில் ஒரு பெரிய அளவை நீங்கள் இழக்க நேரிடும்.
கடன்களை செலுத்துவதற்கு போதுமான சேமிப்பு இல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பாலிசிகளை வாங்குதல்
பணத்தட்டுப்பாட்டை சந்திக்கும் பல வரி செலுத்துவோர் செலுத்த வேண்டிய வரியில் இருந்து தப்பிப்பதற்காக தங்களுடைய கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்து லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குகிறார்கள். கிரெடிட் கார்டுகள் ஒரு வருடத்திற்கு 39 முதல் 44 சதவீத வட்டியை வசூலிக்கின்றன. ஒருவேளை கடனை திருப்பி செலுத்துவதற்கு தாமதப்படுத்தினால் நீங்கள் மிகப்பெரிய கடன் வலையில் மாட்டிக் கொள்வீர்கள். சிறு சிறு செலவுகளை சமாளிப்பதற்கு மட்டுமே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
வரி சேமிப்பு செயல்முறையை கடைசி நிமிடம் வரை திட்டமிடுதல்
வருடத்தின் ஆரம்பத்தில் செய்யாமல் மார்ச் மாதம் வரை வரி சேமிப்பு செயல்முறையை இழுப்பது நீங்கள் அடுத்த நிதி ஆண்டில் தவிர்க்க வேண்டிய ஒரு தவறு. வருடத்தின் இறுதிவரை இந்த வேலையை நீங்கள் இழுத்தடிக்கும் பொழுது பல்வேறு விதமான சவால்களை சந்திப்பீர்கள். ஒரே சமயத்தில் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய வேண்டிய பட்சத்தில், உங்கள் கையில் மார்ச் மாதத்தில் பணம் இல்லாமல் போனால் சிக்கல் ஆகிவிடும். மாறாக வரி சேமிப்பு முதலீடுகளை ஆரம்பத்தில் இருந்தே ஒரு முறையான அணுகு முறையை பின்பற்றி செய்யுங்கள்.
Also read |
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி..!
உங்களுடைய நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) மற்றும் வாலண்டரி பிராவிடண்ட் ஃபண்ட் (VPF) போன்ற பங்களிப்புகளை அதிகரிப்பது, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்வது போன்றவற்றை வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
