வழக்கின் பின்னணி
2024 டிசம்பர் 23 அன்று இரவு 8 மணியளவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கட்டிடம் ஒன்றின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.

