யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய தேவை இல்லை?: ஒரு சில தனிநபர்கள், அதிலும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961-இல் உள்ள பிரிவு 194P-ன் கீழ் 75 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களுக்காக ஒரு சிறப்பு விதி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ இந்த குழுவை சார்ந்தவர்கள் என்றால் நீங்கள் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், வருமான வரி தாக்கல் செய்ய தேவை இல்லை.


