திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவரை திருச்சி விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட அரசர்குளம் பகுதியை சேர்ந்த மதியழகன் (51) என்ற ஆடவர் நேற்று முன்தினம் (மே 23) இரவு சிங்கப்பூர் பயணிக்க வேண்டி திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர்… “சுமார் 5 கோடி மதிப்பு” – ஆடவரை கைது செய்த அதிகாரிகள்
வழக்கம் போல விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் அவரின் பாஸ்ப்போர்ட்டை வாங்கி சோதனை செய்துள்ளனர்.
அதில், அவர் பொய்யான பாஸ்போர்ட் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதாவது அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, மதியழகனை கைது செய்த அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
நடுவானில் ஏற்பட்ட நெஞ்சு வலி; சடலமாக சென்னை வந்திறங்கிய ஆடவர்
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல கடந்த கடந்த மே 10 ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்த வந்த பயணி ஒருவரை திருச்சி சர்வதேச விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் முசிறியைச் சேர்ந்த பிரகாஷ் வேல் (38) என்றும், போலி பாஸ்போர்ட்டுடன் சிங்கப்பூரில் இருந்து பயணம் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

