Last Updated:
பிரதமர் மோடி, 2047க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள் ஒரணியில் பணியாற்ற வேண்டும் என 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் ஒரணியில் பணியாற்றுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டு வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் இந்தியா கிரிக்கெட் அணியை போன்று ஒன்றிணைந்து செயல்பட்டால், இலக்கை அடைய முடியும்” என்றார்.
மேலும் வளர்ந்த இந்தியா என்பது அனைத்து இந்தியர்களின் இலக்கு எனக் கூறிய பிரதமர் மோடி, அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும் நிலையில் நாடும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி கூறினார். நாட்டின் வளர்ச்சியே 140 கோடி இந்தியர்களின் ஆசை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தையாவது உலகத்தர அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்றும், ஒரு நாடு ஒரு உலகளாவிய இலக்கு என்பதன் மூலம் நகரங்களை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றார். இந்தியா அதிவேகமாக நகரமயமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, எதிர்காலத்தில் வளர்ச்சி, புதுமை, நிலைத்தன்மை ஆகிய வசதிகளை உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குவதை நோக்கி செயல்பட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் ஒரணியில் பணியாற்றுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
“2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இலக்கு இதுதான்..” மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கை!


