• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“குழந்தையை கூப்பிடுங்க, சோறு ஊட்டணும்” – கொலை செய்யப்பட்டது தெரியாமல் கதறிய தாய்.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
May 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“குழந்தையை கூப்பிடுங்க, சோறு ஊட்டணும்” – கொலை செய்யப்பட்டது தெரியாமல் கதறிய தாய்.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 24, 2025 3:15 PM IST

பெற்றோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது அவர்களின் மூன்று வயது குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரஹமதுல்லா என்ற இளைஞர் வாழைப்பழம் தருவதாக கூறி குழந்தையை ஆள் அரவமில்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

CrimeCrime
Crime

ஆந்திராவில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான இளைஞரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். பெற்றோருடன் திருமண வீட்டிற்கு வந்த சிறுமி கயவனின் கையில் சிக்கியது எப்படி?.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அம்ருதநகரைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் மூன்று வயது பெண் குழந்தையுடன் உறவினர் திருமணத்திற்காக கம்பாலதின்னே பகுதிக்கு சென்றனர். பெற்றோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது அவர்களின் மூன்று வயது குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரஹமதுல்லா என்ற இளைஞர் வாழைப்பழம் தருவதாக கூறி குழந்தையை ஆள் அரவமில்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குழந்தை உயிரோடு இருந்தால் தன்னை காட்டிக் கொடுத்து விடும் என்பதால், குழந்தையை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை முள்புதரில் வீசிவிட்டார் ரஹமதுல்லா. வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை சல்லடை போட்டு தேடிப் பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஊருக்கு வெளியே முட்புதரில் குழந்தை இறந்து கிடப்பது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது குழந்தையை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் குழந்தையை ரஹமத்துல்லா அழைத்து சென்றதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், இதை குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமை செய்து குழந்தையை கொலை செய்த ரஹமதுல்லா வீட்டில் பதுங்கி இருந்த நிலையில், அவரை வீடு புகுந்து இழுத்து வந்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து புரட்டி எடுத்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து ரஹமத்துல்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ரஹமத்துல்லா மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் “என் குழந்தையை அழைத்து வாருங்கள்…. சோறு ஊட்ட வேண்டும்…..” என்று பித்து பிடித்தவர் போல் புலம்பி கொண்டிருந்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.

இதற்கிடையே உள்ளூர் மக்கள், குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவருக்கு நாங்களே இப்போதே தண்டனை கொடுக்கிறோம் என்றும் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம் என்று சொல்லி காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 475 பேர் கைது

Next Post

ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Test series against England Indian team led by Shubman Gill announced

Next Post
ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Test series against England Indian team led by Shubman Gill announced

ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Test series against England Indian team led by Shubman Gill announced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin